என் பெயர் ஹேமா. நான் பள்ளியில் படித்தபோது நடந்த சம்பவம் இது. நான் சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் படித்தேன். நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது, பள்ளியின் ஆன்னுவல் டே விழாவின் நாடகத்தில் கலந்துக்கொண்டேன்.
எனக்கு என் பாட்டியின் மூக்குத்திகள் ரொம்ப பிடிக்கும். நான் அதை பல முறை ரசித்துள்ளேன். அவர் இரண்டு பக்கத்திலும் மூக்குத்தி அணிந்திருந்தார். நன்கு ஜொலிக்கும் வைர மூக்குத்திகள் அவை. வலது பக்கம் 5 கல் மூக்குத்தி அணிந்திருந்தார். ஒரு பெரிய கல், அதற்கு கீழே 5 சிறிய கற்கள் இருக்கும். இடது பக்கம் முக்கோண வடிவில், 15 சிறிய வைர கற்கள் கொண்ட மூக்குத்தி அணிந்திருந்தார். நான் என் பாட்டியின் மூக்குத்தியை பல முறை தொட்டு பார்த்து, இதை நான் அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளேன். அனால், என் பெற்றோர் எனக்கு மூக்கு குத்தவில்லை. எனக்கும் மூக்கு குத்தச்சொல்லி கேட்க வெட்கமாக இருந்தது. இரண்டு பக்கமும் மூக்குத்தி அணிந்தால் தோழிகள் கிண்டல் செய்வார்கள் என்று பயமாக இருந்தது. என்னுடைய இந்த ஆசை என் பாட்டிக்கும் பெற்றோருக்கும் தெரியவில்லை. என் அம்மா வலதுபுறம் மட்டும் 3 கல் வைத்த மூக்குத்தி அணிந்திருந்தார்.
பள்ளி நாடகத்தில் ஆசிரியை எனக்கு பாட்டி வேடம் கொடுத்தார். அந்த நாடகத்தில் இந்த பாட்டி கதாபாத்திரம் முக்கியமானது. எனக்கு அந்த நாடகத்தில் பங்கேற்பது பிடித்திருந்தது. தினமும் ஒப்பனை நடந்தது. நானும் தவறாமல் கலந்துகொண்டேன். என்னுடைய நடிப்பு அவருக்கு பிடித்திருந்தது. பாட்டி கதாபாத்திரத்துக்கு என்ன ஆடை மற்றும் அலங்காரம் செய்யவேண்டும் என்று ஒரு நாள் விவரித்தார். புடவை ரவிக்கை அணியவேண்டும், நரை முடி வேண்டும் என்று கூறினார். எனக்கு மூக்கு குத்தவில்லை என்பதால் மூக்கின்மேல் பொட்டு ஒட்டிக்கொள்ளலாம் என்று கூறினார்.
மூக்கு குத்திக்கொள்ள இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று எனக்கு தோன்றியது. என் பாட்டியிடம் நான் நடிக்கப்போகும் நாடகத்தைப்பற்றி கூறினேன். 'இந்த நாடகத்திற்காக உங்கள் மூக்குத்திகளை நான் அணியலாமா?' என்று கேட்டேன். 'கதாப்பாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாகயிருக்கும்' என்றேன். அவரோ, 'உனக்குத்தான் மூக்கு குத்தவில்லையே, எப்படி அணிவாய்?' என்று கேட்டார். இப்போ குத்திக்கறேன் என்றேன். என் பாட்டியோ 'நிஜமாவா?' என்றார். 'ஆம்' என்றேன். 'அனால் என் அம்மாவிடம் நீங்கள்தான் இதைப்பற்றி பேச வேண்டும்' என்று கூறினேன். 'என் மருமகளிடம் நான் பேசிக்கொள்கிறேன்' என்று பாட்டி கூறினார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. வெட்கம் கொஞ்சம் குறைந்து தைரியம் அதிகரித்தது.
'இரண்டு
நாங்கள் மூன்று பேரும் தட்டானிடம் சென்றோம். மூக்குத்திகளை தட்டானிடம் பாட்டி கொடுத்தார். நான் அவர் முன்பு அமர்ந்தேன். ஒரு பக்கம் அம்மாவும் மறு பக்கம் பாட்டியும் அமர்ந்தார்கள். அவர்கள் கைகளை நான் பிடித்துக்கொண்டேன். ஒரு பெரிய ஊசியை மூக்குத்தியில் பொருத்தி, என் வலது பக்க மூக்கை குத்தினார். நான் வலியில் கத்தினேன். அம்மா என் தலையை பிடித்துக்கொண்டார். திருகாணியை தட்டான் போட்டுவிட்டார். நான் பெருமூச்சு விட்டேன். இடது பக்கம் குத்த ஊசி எடுத்தார். நான் 2 நிமித்தம் ரெஸ்ட் கேட்டேன்.
இரண்டு நிமிடம் கழித்து, அடுத்த மூக்குத்தியில் ஊசியை பொருத்தி என் இடது பக்கம் மூக்கு குத்தினார். மூக்குத்தியை பொருத்தி திருகாணியை சுழற்றினார். ஒரு வழியாக மூக்கு குத்திக்கொண்டேன். கண்ணாடியை எனக்கு காட்டினார். என் முகத்தில் வைரங்கள் ஜொலித்தன. கண்ணீர் வடிந்தாலும், அந்த வலியிலும், சந்தோஷத்தில் நான் சிரித்தேன். என் முகத்திற்கு வைர மூக்குத்திகள் கொடுத்த பொலிவு அற்புதமாக இருந்ததாக அம்மா கூறினார்.
நாங்கள் வீடு திரும்பினோம்.அன்று மாலை வீடு திரும்பிய அப்பா ஆச்சரியம் அடைந்தார். அனால் அழகாக இருப்பதாக கூறினார். நான் இரண்டு நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. மூக்குத்தியை தொட்டு தொட்டு பார்த்து சந்தோசம் அடைந்தேன். ஆன்னுவல் டே விழாவிற்கு, ஆசிரியை கூறியபடி ஆடை அலங்காரம் செய்துக்கொண்டு பள்ளிக்கு சென்றேன். என்னை பார்த்த ஆசிரியை, 'ஒட்ட வைத்த மூக்குத்தி மிகவும் அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது' என்று கூறினார். நானோ சிரித்துக்கொண்டே, 'இது ஒட்டவில்லை, நான் இந்த நாடகத்திற்காக மூக்கு குத்திக்கொண்டேன்' என்றேன். அவர் நம்பவேயில்லை. நான் இரண்டு மூக்குத்திகளையும் இழுத்து காண்பித்தேன். அதன் தடிமனான தண்டை பார்த்த பின் தான் நம்பினார். என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
அன்று நாடகம் இனிதே அரங்கேறியது. என் தோழிகள் என்னை பாராட்டினர். கேலி செய்யவில்லை. அந்த வருடம், என்னை பார்த்து, மூக்குத்தி அணியாதவர் பலர், ஒரு பக்கம் மூக்கு குத்திக்கொண்டனர். நான் இன்று வரை ரெட்டை மூக்குத்தி அணிந்துக்கொண்டிருக்கிறேன். தன் மூக்குத்திகளை எனக்கு கொடுத்த பாட்டிக்கு மிக்க நன்றி.
Comments for ரெட்டை மூக்குத்தி for school drama
|
||
|
||
|
||
|
||
|
||
|
||
|
||
|
||
|
||
|
||
|
||
Aug 05, 24 09:32 PM
Mar 18, 24 08:38 AM
Mar 16, 24 09:19 AM
Mar 16, 24 09:18 AM
Mar 16, 24 09:12 AM
Mar 09, 24 10:33 PM
Mar 08, 24 11:14 AM
Feb 18, 24 02:38 AM
Feb 18, 24 02:12 AM
Feb 06, 24 08:13 AM
Feb 06, 24 08:11 AM
Feb 06, 24 08:10 AM
Feb 04, 24 12:39 PM
Feb 03, 24 08:36 PM
Feb 02, 24 08:34 AM