மூக்குத்தியின் சிறப்புகள்
by XXX
(Tamilnadu)
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி
By vayal on 10/09/2014
‘வாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.’
- ஆராய்ந்தறிந்த நல்ல அணிகலன்களை அணிந்த இப்பெண்ணோடு சேர்ந்திருத்தல், உயிர், உடலோடு சேர்ந்து இருக்கும் வாழ்வு போன்றது. இவளைப் பிரிந்து வாழ்தல், உயிர் உடலிலிருந்து நீங்கிச் சாதலைப் போல் துன்பம்
தருவதாம்.
ஓர் இளம்பெண் அணியும் அணிகலன்களிடையே, நன்கு ஆராய்ந்தறிந்து மங்களகரமாக அணிவது, மூக்குத்தி தான். மூக்குத்தி அணிந்திருப்பதே ஒரு பெண்ணிற்கு பெருமையும், கவுரவத்தையும் கொடுக்கிறது.
உலகம் முழுவதும் அணியப்படுகிற உடைகளாகட்டும், நகைகளாகட்டும், அவரவரின் நாகரிகத்தை பறை சாற்ற, தங்களை முன்னிலைப்படுத்த என்பதற்காக தான் இருக்கும். ஆனால், இந்தியப் பெண்கள் அணியும் மூக்குத்தி, அழகுக்காக மட்டுமல்ல; ஆரோக்கியத்தின்
குறியீடாகவும் கருதப்படுகிறது.
பெண்களின் உடம்பில், தலை முதல் கால் வரை, நகைகளை அணியலாம். ஒவ்வொரு நகைக்கும், ஓர் அர்த்தம் உண்டு. மூக்குத்தி, பெரும் பணக்காரர்கள் மட்டுமல்ல; பரம ஏழைகள் கூட கண்டிப்பாக அணிகிற ஒரு நகை.
மூக்கு என்ற மனிதனின் ஓர் உடல் உறுப்பு, வாசனை நுகர, சுவாசிக்க மட்டுமல்ல, பல ஆராய்ச்சிகளுக்கு பின், மூக்கு, ‘எமோஷனல், செக்சூவல், ரொமான்ட்டிக்’ போன்ற உணர்ச்சிகளின் ஆதாரம் என, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூக்கு குத்தும் போது அழுத்தம் கொடுக்கப்படும் நரம்பு, மகப்பேறு சமயத்தில், சுலபமான, வலியில்லாத குழந்தை பிறப்பிற்கு வழிவகுக்கும் என, இந்திய
மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது.
மூக்கு குத்தும் இடம், பெண்களின் உற்பத்தி திறனை செம்மைப்படுத்துவதாக அமைய வேண்டும் என்கிறது,
ஆயுர்வேதம்.
மூக்கு குத்தும் இடத்தில் நரம்பு செம்மையாக இருக்கிறதா, அதை காயப்படுத்தாமல் குத்த முடியுமா என்பதை, மூக்கு பகுதியை தொட்டவுடன் கூறும் கைவினைஞர்கள், அந்த காலத்தில் இருந்தனர். அவர்கள் கையால் மூக்கு குத்திக் கொள்வது தான் பாதுகாப்பானது;
சரியானது என்று, பெண்கள் நம்பினர்.
சரி, மூக்கு குத்திக் கொள்ள தயார் என்றாலும், எந்த பக்கம் குத்திக் கொள்வது என்ற கேள்வி எழுகிறது. வட இந்திய பெண்கள் இடது பக்கமும், தென்னிந்திய பெண்கள் வலது பக்கமும்,
மூக்குத்தி அணிகின்றனர்.
ஆனால், இரண்டு பக்கமும் மூக்கு குத்திக் கொள்வது சாலச் சிறந்தது.
ஆனால், இடது பக்கம் மட்டுமாவது மூக்குத்தி அணிவது நல்லது. பருவ வயதை அடைந்தவுடன் அணியப்
படுகிற ஒற்றை மூக்குத்தி, மாதவிடாய் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும் என, சொல்லப்படுகிறது.
திருமணத்திற்கு பின், இரண்டு பக்கமும் மூக்குத்தி
அணிவது நல்லது.
தலைப்பகுதியிலிருந்து வரும் வேகஸ் நரம்பு, பெண்ணின் கர்ப்பப் பையை தொட்டு செல்கிறது. உடலியக்கத்தின்போது உருவாகும் நச்சு வாயுக்களை, இந்த நரம்பு ஏந்தி வந்து, மூக்கின் துளை வழியே வெளியேற்றுகிறது. மூக்குத்தி அணிவதற்கான துளை வழியாகவும், இந்த நச்சு வாயு வெளியேறுவதால், பெண்களின் உடலில் சூடு அதிகம்
தங்காது.
இன்றும், கிராம வயல்களில் நாற்று நடும் பணியில், பெண்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றனர். ஆண்களின் கைகளின் வெம்மை தாளாமல், நாற்றுகள் கருகி விடும் என்பதால், வாதத்தன்மை கொண்ட குளிர்ந்த கைகளால், பெண்கள், இப்பணியை செவ்வனே செய்கின்றனர்.
மூக்குத்தி அணிந்திருக்கும் பெண்கள் மீது, ‘மெஸ்மரிசம், ஹிப்னாடிசம்’ போன்றவற்றை பிரயோகிக்க முடியாது என்கின்றனர், கண் மருத்துவர்கள். மூக்குத்தி அணிந்தவர்களின் மூளையின் செயல்பாடுகளை, எண்ணங்களை கட்டுப்படுத்தி அடிபணிய வைப்பது மிகவும் கடினம் என்பதும், நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை.
உடலிலுள்ள வெப்பத்தை கிரகித்து, நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கக் கூடிய ஆற்றல், தங்கத்திற்கு உண்டு. தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலிலுள்ள வெப்பத்தை கிரகித்து, தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும்.
ஆரோக்கியம், மருத்துவ ரீதியான நகை என்ற மட்டில், சும்மா மாட்டிக் கொள்வது சரியாகுமா?
அகன்ற மூக்கு உள்ள பெண்கள், ஐந்து கற்கள் கொண்ட வட்ட மூக்குத்தியும், நீண்ட, சப்பை, குடமிளகாய் போன்ற வடிவம் உடையவர்கள், மூக்குத்தி போட்டுக் கொள்வதன் மூலம், அந்த குறை தெரியாதபடி சரி செய்ய முடியும். இவர்களுக்கு, சங்கு, முத்து மூக்குத்தி நன்றாக இருக்கும்.
கூர்மையான மூக்கு உடையவர்கள், இடது மூக்கில் ஒற்றைக் கல் மூக்குத்தி போட்டுக் கொண்டால், பார்க்க அழகாய் இருக்கும். வெறும் மொட்டு போல தங்கத்தில் போட்டுக் கொள்வது, எல்லா முகத்திற்கும் பொருத்தமாய் இருக்கும்.
சிவந்த நிறம் கொண்டவர்கள்,
பச்சைக்கல் மூக்குத்தியும்; மாநிறம் உடையவர்கள் சிவப்பு கல் மூக்குத்தியும்;
கறுமை நிறம் கொண்டவர்கள்
வெள்ளை கல் மூக்குத்தியும் அணிந்தால், முகம் வசீகரமாக இருக்கும் என்கின்றனர், அழகு கலை நிபுணர்கள்.
முடிவாக, மூக்குத்தி அணிவது, காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம். இன்றைய பேஷன் உலகத்தில் கூட, இது ஓர் அங்கமாக தான் இருக்கிறது.
அழகிற்காக, பேஷனுக்காக என்றில்லாமல், இவ்வளவு ஆரோக்கிய பலன்கள் இருப்பதால், கண்டிப்பாக நாமும் மூக்கு குத்தி, மூக்குத்தி போட்டுக்கலாமே!
Share this: